என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா தொற்று அதிகரிப்பு - 4 மாநிலங்களில் ஒரே நாளில் 7 பேர் பலி
    X

    கொரோனா தொற்று அதிகரிப்பு - 4 மாநிலங்களில் ஒரே நாளில் 7 பேர் பலி

    • குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
    • தொற்று பரவல் கேரளாவில்தான் அதிகமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 4026 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அது மேலும் உயர்ந்து இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4302 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த 7 பேரில் மகாராஷ்டிர மாநிலத்தில் 4 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத், டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர். இதுவரை மொத்த இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பரவல் கேரளாவில்தான் அதிகமாக இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி அங்கு 1373 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். குஜராத்தில் நேற்று 461 பேரும், டெல்லியில் 457 பேரும் சிகிச்சையில் இருந்தனர். தமிழ்நாட்டில் 216 பேரும், புதுச்சேரியில் 22 பேரும் சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×