search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானை காங்கிரஸ் வன்முறை, குற்றம், ஊழலில் நம்பர் ஒன் மாநிலமாக்கிவிட்டது- மோடி கடும் தாக்கு
    X

    ராஜஸ்தானை காங்கிரஸ் வன்முறை, குற்றம், ஊழலில் நம்பர் ஒன் மாநிலமாக்கிவிட்டது- மோடி கடும் தாக்கு

    • பா.ஜனதா ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போகிறது.
    • ஐந்து வருடத்திற்கு முன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் எங்களுடைய திட்டங்களை நிறுத்திவிட்டார்கள்.

    ராஜஸ்தானில் நாளைமறுதினம் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    தியோர்கார் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஆட்சி அமைக்கப் போகிறது. பா.ஜனதாவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினால், ராஜஸ்தானை சுற்றுலா, முதலீடு, தொழில், கல்வி ஆகிய துறைகளில் நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்குவோம்.

    காங்கிரஸ் வன்முறைகள், குற்றச் செயல்கள், ஊழல், ஐந்து ஆண்டு ஆட்சியில் தேர்வுத்தாள்கள் வெளியானது ஆகியவற்றில் ராஜஸ்தானை நம்பர் ஒன் மாநிலமாக உயர்த்தியுள்ளது.

    ஐந்து வருடத்திற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, அவர்கள் எங்களுடைய திட்டங்களை நிறுத்திவிட்டார்கள். நாங்கள் டிசம்பர் 3-ந்தேதிக்குப் பிறகு ஆட்சி வந்த பிறகு, அந்த திட்டங்களை முன்னெடுத்து வந்து, மாநில மக்களுக்கு பயன்பெறச் செய்வோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    மேலும், குர்ஜார் மகன் (சச்சின் பைலட்) அரசியலில் தன்னுடைய இடத்திற்காக போராடி வருகிறார். கட்சிக்காக அவருடைய வாழ்க்கையை கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, பாலாடை போன்று ராயல் பேமிலி அவரை நீக்கிவிடும்.

    அவரது தந்தை ராஜேஷ் பைலட்டிற்கு இவ்வாறுதான் செய்தார்கள். தற்போது அவரது மகனுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். குர்ஜார்கை முந்தைய காலத்திலும், தற்போதுதும் காங்கிரஸ் அவமதித்துள்ளது.

    பெண்களுக்கு எதிரான அரசை இதற்கு முன்னெப்போதும் ராஜஸ்தான் பார்த்ததில்லை" என்றார்.

    Next Story
    ×