டைரி மில்க் சாக்லேட்டில் புழு... காங்கிரஸ் தலைவரின் புகாருக்கு பதில் அளித்த கேட்பெரி நிறுவனம்

நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன்.என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
Cadbury Chocolate
Published on

கேட்பெரி டைரி மில்க் சாக்லேட்டில் புழு உள்ளதாக மகாராஷ்டிரா பிரதேச இளைஞர் காங்கிரசின் பொதுச்செயலாளர் அக்ஷய் ஜெயின் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது பதிவில், "என்னுடைய கேட்பெரி சாக்லேட்டில் ஒரு புழு போன்ற பூச்சி இருந்தது. நான் பல ஆண்டுகளாக கேட்பரி சாக்லேட் சாப்பிட்டு வருகிறேன். எனக்கு இது மிக மோசமான அனுபவம். இது தொடர்பாக நடவடிக்கை எடுங்கள்" என்று தெரிவித்திருந்தார். இந்த பதிவில் கேட்பெரி நிறுவனத்தை அவர் டேக் செய்திருந்தார்.

இந்நிலையில், அவரது குற்றச்சாட்டிற்கு கேட்பெரி நிறுவனம் பதில் அளித்துள்ளது. கேட்பரி நிறுவனத்தின் பதிவில், "உங்களின் மோசமான அனுபவத்திற்கு வருந்துகிறோம். உங்களின் புகாரை எழுத்துபூர்வமாக அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com