என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்காலி பேசும் குடிபெயர்ந்தவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: பிரதமர் மோடியை சந்தித்த காங்கிரஸ் தலைவர்
    X

    பெங்காலி பேசும் குடிபெயர்ந்தவர்கள் மீது தாக்குதல் விவகாரம்: பிரதமர் மோடியை சந்தித்த காங்கிரஸ் தலைவர்

    • பெங்காலி பேசும் மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுகிறார்கள்.
    • அவர்கள் பெங்காலியில் பேசுகிறார்கள் என்பது மட்டும் அவர்களுடைய ஒரே குற்றம்.

    பெங்காலி (மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) பேசும் மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குடியெர்ந்து வேலைபார்த்து வருகிறார்கள். அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

    பிரதமரை சந்தித்தபோது, வெளிமாநிலத்தில் குடிபெயர்ந்து வேலை பார்க்கும் பெங்காலி பேசும் மக்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்ட மதுவா சமுதாயம் மேற்கு வங்கத்தில் பிரச்சினையை மேற்கொண்டு வருகின்றனர் என வலியுறுத்தியுள்ளார்.

    பெங்காலி பேசும் மக்கள் தாக்கப்படும் சூழ்நிலையை தான் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இது நடக்கக் கூடாது என பிரதமர் உறுதி அளித்ததாகவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம ஏதும் இல்லை. சில நாட்களுக்கு முன்னதாக நான் டெல்லி வந்திருந்தேன். அப்போது, தற்செயலாக பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

    மோடியிடம் ஒரு கடிதம் வழங்கியுள்ளார். அதில் "பெங்காலி பேசும் மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் பெங்காலியில் பேசுகிறார்கள் என்பது மட்டும் அவர்களுடைய ஒரே குற்றம்.

    சம்பந்தப்பட்ட நிர்வாகத்தால் அவர்கள் பெரும்பாலும் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர்களாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, ஊடுருவல்காரர்களாகக் கருதப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×