search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் காங்கிரஸ் தனித்து போட்டி: 17 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிக்கிறது
    X

    தெலுங்கானாவில் காங்கிரஸ் தனித்து போட்டி: 17 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிக்கிறது

    • வேட்பாளர்களின் பின்னணி மற்றும் உளவு த்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
    • காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

    தெலுங்கானாவில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

    கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணு கோபால், அம்பிகா சோனி தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபதாஸ் முன்சி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    கூட்டத்தில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கு ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்க உள்ளனர்.

    வேட்பாளர்களின் பின்னணி மற்றும் உளவு த்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

    தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத், செவெல்லா, மஹபூபாபாத் நகர், நாகர் கர்னூல், கரீம் நகர், நிஜாமாபாத் ஆகிய இடங்களுக்கு வேட்பாளர்கள் தேர்வில் ஏற்கனவே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு பல்வேறு நிபந்தனைகனின் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மாநிலத்தில் 14 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.

    Next Story
    ×