search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
    X

    பிரதமர் மோடி

    தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

    • மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக காலமானார். நடிகர் கிருஷ்ணா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன்பின், தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×