search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ராமர் கோவில் தபால் தலைகளின் தொகுப்பு புத்தகம் வெளியீடு
    X

    ராமர் கோவில் தபால் தலைகளின் தொகுப்பு புத்தகம் வெளியீடு

    • தபால் தலையை வெளியிட்ட பிரதமர் மோடி ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    • பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

    அயோத்தி ராமர் பிறந்து, வளர்ந்த இடம் என்பதால் அங்கு 5 வயதுடைய பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    மைசூரை சேர்ந்த சிற்பி இந்த பால ராமர் சிலையை செதுக்கி உள்ளார். இந்த சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

    நேற்று பால ராமர் சிலையை அயோத்தி கோவிலுக்குள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இன்று பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

    இந்நிலையில், ராமர் கோவில் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். தபால் தலைகளின் தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    தொகுப்பு புத்தகம் வெளியிட்ட பிரதமர் மோடி பின்னர் ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×