என் மலர்
இந்தியா

சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் என்ஜின் கோளாறு.. டெல்லியில் அவசர தரையிறக்கம்
- விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு என்ஜின் வேலை செய்யவில்லை.
- பாதுகாப்பு கருதி விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 9.46 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அதில் 231 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பயணித்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு என்ஜின் வேலை செய்யவில்லை. இதனை அறிந்த விமானி, உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பினார். டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் பாதுகாப்பு கருதி விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததும், விமானம் இரவு 10.38 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.
Next Story






