என் மலர்
இந்தியா

அறுவை சிகிச்சைக்கு பின் சந்திரசேகர ராவ் எப்படி இருக்கிறார்? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை..
- இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி.
- எலும்பு முறிவு காரணமாக சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை.
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சந்திரசேகர ராவ் உடல்நிலை குறுத்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த அறிக்கையில், "சந்திரசேகர ராவ் உடல்நிலை சீராக உள்ளது. நாள் முழுக்க ஓய்வில் இருந்த அவருக்கு வலி எதுவும் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது."
"சர்வதேச மருத்துவ வழிகாட்டுதல்களின் படி நோயாளியை 12 மணி நேரத்திற்குள் நடக்க வைக்க வேண்டும். அந்த வகையில், மருத்துவர்கள் முன்னிலையில் சந்திரசேகர ராவ் நடக்க வைக்கப்பட்டார். அவர் விரைந்து குணமடைய உடற்பயிற்சிகளை பரிந்துரை செய்திருக்கிறோம். சந்திரசேகர ராவ் குணமடையும் விதம் மருத்துவ குழுவுக்கு திருப்தியளிக்கும் வகையில் தான் உள்ளது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.






