என் மலர்
இந்தியா

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
- நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல்.
- இடைக்கால பட்ஜெட் என்பதால் மென்மையான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்பு.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் "தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் முடிவடைந்த பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Live Updates
- 1 Feb 2024 11:10 AM IST
அனைவருக்கும் வீடு, குடிநீர், மின்சாரம், இலவச எரிவாயு சிலிண்டர் என பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
- 1 Feb 2024 11:09 AM IST
மிகப்பெரும்பான்மையுடன் பாஜக அரசுக்கு மீண்டும் மக்களின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
- 1 Feb 2024 11:08 AM IST
அனைத்து மாநிலங்களுக்கான வளர்ச்சி என சமூக, புவியியல் உள்ளடக்கத்தை கொண்டதாக அரசின் கொள்கைகள் உள்ளது.
- 1 Feb 2024 11:07 AM IST
சுயதொழில் முனைவு மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்பட்டன.
நமது பொருளாதாரத்திற்கு புதிய வேகம் கிடைத்தது.
- 1 Feb 2024 11:06 AM IST
அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கான ஒருங்கிணைந்த வளர்ச்சியே குறிக்கோள்.
மக்களுக்கு சாதகமான திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டன.
- 1 Feb 2024 11:05 AM IST
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
- 1 Feb 2024 11:03 AM IST
பாராளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- 1 Feb 2024 10:26 AM IST
இடைக்கால பட்ஜெட்டிற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
- 1 Feb 2024 10:19 AM IST
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக குறியீட்டு எண் சென்செக்ஸ் 248.4 புள்ளிகள் உயர்ந்து 72,000.51 புள்ளிகளுடன் வர்த்தம் தொடங்கியது.
அதேபோல் இந்திய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.65 புள்ளிகள் உயர்ந்து 21.788.35 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
- 1 Feb 2024 10:15 AM IST
மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்குவதற்காக பாராளுமன்ற வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.







