என் மலர்
இந்தியா

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
- நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல்.
- இடைக்கால பட்ஜெட் என்பதால் மென்மையான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்பு.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் "தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் முடிவடைந்த பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Live Updates
- 1 Feb 2024 11:21 AM IST
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
- 1 Feb 2024 11:18 AM IST
திறன் இந்தியா திட்டத்தின் மூலம் 1.40 கோடி இந்தியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
- 1 Feb 2024 11:16 AM IST
அரசின் பயன்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே உண்மையான சமூக நீதியின் அடையாளம்.
பயன்கள் தகுதியுள்ள அனைவரையும் சென்றடைவதில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது.
அரசின் அனைத்து வளங்களும் சமமாக அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
- 1 Feb 2024 11:14 AM IST
தங்கள் அரசு பொறுத்தவரை சமூக நீதி என்பது சிறப்பான அரசு நிர்வாக மாடலாக திகழ்கிறது.
- 1 Feb 2024 11:13 AM IST
அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதிக்காக அரசு பணியாற்றி வருகிறது. அனைத்து சமூகத்தினரையும், அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக அரசு செயல்பட்டு வருகிறது
இதற்கு முன்பு சமூக நீதி என்பது வெறும் வெற்று அரசியல் முழக்கமாக மட்டுமே இருந்தது.
- 1 Feb 2024 11:11 AM IST
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.






