என் மலர்
இந்தியா

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
- நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல்.
- இடைக்கால பட்ஜெட் என்பதால் மென்மையான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்பு.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் "தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் முடிவடைந்த பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Live Updates
- 1 Feb 2024 11:33 AM IST
4 கோடி இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேலும் 2 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன.
- 1 Feb 2024 11:33 AM IST
விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
30 கோடி பெண்களுக்கு முத்ரா யோஜனா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
- 1 Feb 2024 11:31 AM IST
பருவநிலை மாற்ற சவால்களையும் உலகப் பொருளாதாரம் எதிர்கொண்டு வருகிறது.
எல்லாவற்றுக்கும் இடையிலும் இந்தியா முன்னேற்ற பாதையை காட்டி உள்ளது.
உலக பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு அளித்துள்ளது.
- 1 Feb 2024 11:29 AM IST
உலக பொருளாதாரம் மிகப்பெரிய விலைவாசி உயர்வு, அதிக அளவிலான வட்டி போன்றவற்றிற்கு ஆட்பட்டு வருகிறது.
- 1 Feb 2024 11:29 AM IST
உலகின் சிக்கலான ஒரு காலகட்டத்தில் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது.
- 1 Feb 2024 11:28 AM IST
ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி போன்றவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரி உதவியாக அமைந்துள்ளது.
- 1 Feb 2024 11:28 AM IST
மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, அவர்கள் சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் நாட்டில் அனைத்து பகுதிகளும் துடிப்புடன் பங்காற்றி வருகின்றன.
- 1 Feb 2024 11:26 AM IST
இளைஞர்களுக்கு ரூ.22.5 லட்சம் கோடி தொழில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
2.3 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
- 1 Feb 2024 11:25 AM IST
மேக்னஸ் கால்சனுக்கு எதிராக தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- 1 Feb 2024 11:22 AM IST
இளைஞர்களுக்கு ரூ.22.5 லட்சம் கோடி தொழில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
FM Sitharaman says, "The government is equally focused on GDP - Governance, Development and Performance." pic.twitter.com/iynkhPCxT5
— ANI (@ANI) February 1, 2024








