என் மலர்
இந்தியா

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை- லைவ் அப்டேட்ஸ்
- நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல்.
- இடைக்கால பட்ஜெட் என்பதால் மென்மையான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்பு.
விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில் "தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் முடிவடைந்த பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வோம்" எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் 3-வது முறையாக தொடர்ந்து பிரதமராக தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Live Updates
- 1 Feb 2024 10:14 AM IST
பட்ஜெட் உரையை ஜனாதிபதியிடம் காட்டி வாழ்த்து பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 1 Feb 2024 9:55 AM IST
நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம் தொடர்ந்து 6 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது நிதியமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன் மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- 1 Feb 2024 9:53 AM IST
நிர்மலா சீதாராமன் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை தனது குழுவுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.







