என் மலர்
இந்தியா

சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533.59 கோடி செலவு செய்த பா.ஜ.க.: ஆனால் தமிழுக்கு... RTI-ல் அதிர்ச்சி தகவல்
- 10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது.
- தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ஒதுக்கியதை விட 17 மடங்கு கூடுதல் நிதி சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக சமஸ்கிருத மொழியை மேம்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்தது அம்பலமாகி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533.59 கோடி செலவு செய்தது ஆர்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது. சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533.59 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய பா.ஜ.க. அரசு மற்ற மொழிகளுக்கு மிக குறைவான தொகையே ஒதுக்கீடு செய்துள்ளது.
10 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு ஒதுக்கியதை விட 17 மடங்கு கூடுதல் நிதி சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆண்டுதோறும் சமஸ்கிருதத்திற்கு ரூ.230.24 கோடி ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசு தமிழுக்கு 5 சதவீதத்திற்கும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.






