என் மலர்
இந்தியா

டெல்லி கார் குண்டு வெடிப்பின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
- குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 'டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்'. அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பின் புதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11 வினாடிகளே ஓடும் அந்த வீடியோவில் சிக்னலுக்காக வாகனங்கள் நின்று கொண்டிருக்க குண்டு வெடிப்பிற்குள்ளான காரும் நிற்கிறது. சில வினாடிகளில் வாகனங்கள் நகர தொடங்கியதும் கார் வெடிப்புக்குள்ளாகிறது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.






