search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புற்றுநோய் பாதிப்பு... முதல் இடத்தில் எந்த மாநிலம் தெரியுமா?
    X

    புற்றுநோய் பாதிப்பு... முதல் இடத்தில் எந்த மாநிலம் தெரியுமா?

    • இந்தியாவில் 5 வகையான புற்றுநோய்தான் அதிக அளவில் ஏற்படுகிறது.
    • பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    உலகிலேயே மக்கள்தொகை மிகுந்த நாடான இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், வயிறு புற்றுநோய் ஆகிய 5 வகையான புற்றுநோய்தான் அதிக அளவில் ஏற்படுகிறது.

    நம் நாட்டில் 9 பேரில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களில் 68 பேரில் ஒருவர் நுரையீரல் புற்றுநோயாலும், பெண்களில் 29 பேரில் ஒருவர் மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    நம் நாட்டில் உத்தரபிரதேசத்தில்தான் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதற்கு முந்தைய ஆண்டில் 2 லட்சம் பேருக்கு இந்த நோய் ஏற்பட்டது.

    இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் 1 லட்சத்து 21 ஆயிரம் பேரை புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் பேரும், பீகாரில் ஒரு லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் புதிதாக 83 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கிறது.

    ஆனால் பாதிப்பு விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்த வரிசை மாறுகிறது.

    அதாவது இந்த பட்டியலில் கேரளாதான் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 1 லட்சம் பேரில் 135 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் உள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் 1 லட்சம் பேரில் 122 பேருக்கு பாதிப்பு இருக்கிறது.

    இந்த பட்டியலில் டெல்லி (103 பேர்) 3-வது இடத்திலும், கர்நாடகம் (102 பேர்) 4-வது இடத்திலும், கோவா (97 பேர்) 6-வது இடத்திலும், இமாசலபிரதேசம் (92 பேர்) 7-வது இடத்திலும், உத்தரகாண்ட் (91 பேர்) 8-வது இடத்திலும், அசாம் (90) பேர்) 9-வது இடத்திலும், பஞ்சாப் (89 பேர்) 10-வது இடத்திலும் உள்ளன.

    Next Story
    ×