பாஜக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக C. P. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக உள்ளார்.எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
பாஜக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக C. P. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
Published on

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நலனை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை தொடங்கியது. இதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக (பா.ஜ.க.) கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடப் போவதாக இந்தியா கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளனர். எனவே துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே நேரடி போட்டி உருவாகியது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்ப்பில் யாரை வேட்பாளராக போட்டியிட தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.

அதன்படி துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த C. P. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com