என் மலர்
இந்தியா

பா.ஜனதா அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து புத்தகம் வெளியீடு
- இந்த புத்தகம் 143 பக்கங்களைக் கொண்டது.
- பா.ஜனதா தொடர்ச்சியாக 2-வது முறை மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது.
புதுடெல்லி :
பா.ஜனதா தொடர்ச்சியாக 2-வது முறை மத்தியில் ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ள 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு முன்னேற்றத்துக்காக அக்கட்சி செய்த பணிகளை பட்டியலிட்டு புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்து புத்தகம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த புத்தகம் 143 பக்கங்களைக் கொண்டது. இந்த சாதனைகளை நாடு முழுவதும் பொதுமக்களிடையே கொண்டுசெல்லும் பிரசார பணியை பா.ஜனதா கட்சியினர் தொடங்கி உள்ளனர். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவைத் தொடர்ந்து இந்த பணிகளை தொடங்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல் வரை முழுவீச்சில் நடைபெறும் என தெரிகிறது.
இதற்கு முன்னோட்டமாக 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து டெல்லியில் நேற்று ஊடகத்துறையினருடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சிங், வர்த்தகத்துறை மந்திரி பியூஷ்கோயல், ரெயில்வே மந்திரி அஸ்விணி வைஷ்ணவ், தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்குர் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, கொரோனா தடுப்பூசி, வந்தேபாரத் ரெயில்கள், ஏழைகளுக்கு வீடுகள், வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் கழிவறை வசதிகள் போன்றவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.