என் மலர்
இந்தியா

விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைக்கிறது என்பது உண்மையல்ல: பாஜக எம்.பி.
- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் காவல்துறையினர் ஊழல் வழக்குகளை விசாரிப்பதில்லை.
- அப்படி விசாரித்திருந்தால் ஊழல் நடைபெற்றதை கண்டு பிடித்திருப்பார்கள்.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைத்து சோதனையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று விசாரணைக்கு ஆஜராக சரத் பவார் கட்சியின் எம்.எல்.ஏ.-வும், அவரது உறவினருமான ரோகித் பவாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ரோகித் பவார் ஏற்கனவே அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி பதில் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் நிலை குறித்து பா.ஜனதா எம்.பி. ஜெயந்த் சின்ஹா கூறுகையில் "எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை. உண்மை என்னவென்றால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதில்லை. அவர்கள் விசாரணை நடத்தியிருந்தால், ஊழல் நடத்திருப்பதை கண்டு பிடித்திருப்பார்கள்" என்றார்.






