என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் கடும் வெப்பஅலை: மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு- வீடியோ

    • வெப்பம் அதிகரித்ததால் மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.
    • அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பீகார் மாநிலம் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவிகள் படித்து வந்தனர். மதியம் நேரத்தில் கடும் வெயில் காரணமாக வெப்ப அலை வீசியது. இதை மாணவிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    இந்த வெப்ப அலையால் மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக சதார் மருத்துவமனை டாக்கடர் ரஜனிகாந்த் குமார் கூறுகையில் "வெப்பநிலை அதிகரித்ததால் மாணவிகள் கடினமான நிலையை எதிர்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். வெப்பம் காரணமாக உடலில் இருந்து வியர்வை மூலம் அதிக அளவில் நீர் வெளியேறும் என்பதால், அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்" என்றார்.

    அதேபோல் பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    Next Story
    ×