என் மலர்
இந்தியா

நிதிஷ்குமார்
மோசமான வானிலை - நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
- முதல் மந்திரி நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.
- கயா நகரில் நிலவிய மோசமான வானிலையால் தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் திடீரென மோசமான வானிலை ஏற்பட்டது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் கயா மாவட்டத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
முதல் மந்திரியின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






