என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

X
நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து- ஒருவர் பலி
By
மாலை மலர்4 Feb 2023 4:34 PM GMT

- காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
- மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், திட்குமார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திட்குமார் கிராமத்தைச் சேர்ந்த மணிருல் கான் என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், மேலும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
Next Story
×