என் மலர்tooltip icon

    இந்தியா

    தானியங்கி பானிப்பூரி விற்பனை எந்திரம்
    X

    தானியங்கி பானிப்பூரி விற்பனை எந்திரம்

    • எந்திரத்தில் சென்சார்கள் மற்றும் குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன.
    • தானியங்கி எந்திரம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு நகரில் நடக்கும் சில வினோதமான நிகழ்வுகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பெங்களூருவில் ஒரு தானியங்கி பானிப்பூரி விற்பனை எந்திரம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த தனித்துவமான எந்திரம் அப்பகுதியில் எச்.எஸ்.ஆர். லேஅவுட்டில் அமைந்துள்ளது. இந்த எந்திரம் நிறுவப்பட்டுள்ள ஸ்டாலில் ஒரு ஊழியர் மட்டும் இருக்கிறார். இந்த எந்திரத்தில் சென்சார்கள் மற்றும் குழாய்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தானியங்கி எந்திரம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    'எச்.எஸ்.ஆர். லேஅவுட் 2050-ல் வாழ்கிறது' என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

    Next Story
    ×