என் மலர்
இந்தியா

இந்திய சமூகத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை... மோடியிடம் உறுதி அளித்த ஆஸ்திரேலிய பிரதமர்
- ஆஸ்திரேலியாவில் கோவில்கள் தாக்கப்படுவதால் இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
- இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர், இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கோவில்களை அவமதிப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், பாதுகாப்பு குறித்த அச்சமும் நிலவுகிறது.
இந்நிலையில், இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள ஐதராபதாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேசினர்.
மேலும், ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்கள் மீதான தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி கூறினார். இதற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய பிரதமர், இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இத்தகவலை செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
Next Story






