என் மலர்tooltip icon

    இந்தியா

    பழங்குடியினருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க அசாம் அமைச்சரவை ஒப்புதல்
    X

    பழங்குடியினருக்கு துப்பாக்கி லைசென்ஸ் வழங்க அசாம் அமைச்சரவை ஒப்புதல்

    • பூர்வீக குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும்.
    • மாநிலத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

    அசாம் மாநிலத்தில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் வெகுதூரத்தில் (Remote Area) உள்ள பழங்குடியினருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "அசாம் மிகவும் மாறுப்பட்ட மற்றும் உணர்வுப்பூர்வமான மாநிலம். அசாமின் சில பகுதிகயில் வாழும் மக்கள் பாதுகாப்பற்ற நிலை எனக் கருதுகிறார்கள். அவர்கள் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    தகுதியுள்ள மக்களுக்கு அரசு துப்பாக்கி உரிமம் வழங்கும். அவர்கள் பூர்வீக குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும். மாநிலத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வாழும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்" என்றார்.

    துப்ரி, மொரிகான், பர்பேட்டா, நாகோன் மற்றும் தெற்கு சல்மாரா-மன்காச்சர் பகுதிகளில் உள்ளவர்கள் இதுபோன்ற பிரிவின் கீழ் வருகிறார்கள். இந்த இடங்களில் நம்முடைய மக்கள் மைனாரிட்டியாக உள்ளனர்" என்றார்.

    Next Story
    ×