என் மலர்
இந்தியா

2026 அசாம் சட்டமன்ற தேர்தல் இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும்: ஹிமாந்தா சர்மா
- கவுரவ் கோகாய் குடும்பத்தில் ஒருவர் இந்தியர். மற்ற மூன்று பேர் (மனைவி மற்றும் குழந்தைகள்) வெளிநாட்டினர்.
- சட்டசபை தேர்தலுக்கான போட்டி இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும்.
அசாம் மாநில முதல்வரான ஹிமாந்தா பிஸ்வா சர்மா, 2026 அசாம் சட்டமன்ற தேர்தல் இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில தலைவராக கவுரவ் கோகாய் இருந்து வருகிறார். இவரது மனைவி பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்சியான ஐஎஸ்ஐ உடன், கவுரவ் கோகாய் மனைவிக்கு தொடர்பு இருந்ததாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தல் இந்தியா- பிரிட்டன் இடையில் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:-
கவுரவ் கோகாய் குடும்பத்தில் ஒருவர் இந்தியர். மற்ற மூன்று பேர் (மனைவி மற்றும் குழந்தைகள்) வெளிநாட்டினர். சட்டசபை தேர்தலுக்கான போட்டி இந்தியா- பிரிட்டன் இடையே நடக்கும். இது இந்தியா பெரியதா? அல்லது பிரிட்டன் பெரியதா? என்பதற்கானதாக இருக்கும்.
இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் பொரோ இருந்திருந்தால், போட்டி இருந்திருக்கும். ஆனால் தற்போது போட்டியில்லை. செப்டம்பர் 10ஆம் தேதி இன்னும் ஏராளமான விசயங்கள் வெளிவரும்.
இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கவுரவ் கோகாய் அங்கு போர் இருக்கும் (Juz Hobo) எனற முழக்கத்துடன் பணியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில்தான் ஹிமாந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு தெரிவித்துள்ளார்.






