என் மலர்
இந்தியா

விமான சேவை பாதிப்பு: 37 ரயில்களில் 116 கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு!
- கூடுதல் பெட்டிகள் ஸ்லீப்பர், ஏசி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என வழித்தடத்தை பொறுத்து மாறுபடும்
- 26 லட்சம் பயணிகள் பயனடைவார்கள்
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் 37 ரயில்களில் கூடுதலாக 116 பெட்டிகளை இணைத்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. கூடுதல் பெட்டிகள் ஸ்லீப்பர், ஏசி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என வழித்தடத்தை பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில்வே மண்டலம் 5 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஒரு பயணத்திற்கு 30,780 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 18 பெட்டிகள் கொண்ட 30 புதிய சிறப்பு ரயில்களை இயக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கூடுதல் பெட்டிகள், சிறப்பு ரயில்கள் மூலம் 26 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கோவை, சேலம், கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.






