search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
    X

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

    • அக்னிபாத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது என பொதுநல மனுவில் தகவல்
    • அக்னிபாத் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அக்னிவீரர்களில் 25% மட்டுமே ஆயுதப்படைகளில் தக்கவைக்கப்படுவார்கள்.

    புதுடெல்லி:

    ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்தப்படுகின்றன. அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

    அவர் தனது மனுவில், அக்னிபாத் திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும், இந்த திட்டம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ஜூன் 14ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

    'ஆயுதப்படைகளுக்கு நிரந்தர கமிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அதிகாரி, 60 வயது வரை நாட்டிற்காக பணியாற்ற முடியும். குறுகியகால சர்வீஸ் கமிஷனில், ஒரு அதிகாரி ராணுவத்தில் சேர்ந்து 10 முதல் 14 ஆண்டுகள் வரை அதிகாரியாக பணியாற்றுவதற்கான விருப்பத்தேர்வு உள்ளது. எனினும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அக்னிவீரர்களில் 25% மட்டுமே ஆயுதப்படைகளில் தக்கவைக்கப்படுவார்கள், மீதமுள்ள 75% பேர் சேவையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.' என்ற தகவலையும் வழக்கறிஞர் ஷர்மா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×