என் மலர்tooltip icon

    இந்தியா

    எம்.பி., எம்.எல்.ஏ.-க்களை திரும்பப் பெறும் உரிமை வேண்டும்: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. வலியுறுத்தல்
    X

    எம்.பி., எம்.எல்.ஏ.-க்களை திரும்பப் பெறும் உரிமை வேண்டும்: மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. வலியுறுத்தல்

    • எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்களின் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்வதில் குறைபாடு உள்ளது.
    • தேர்தலுக்கு முன் தலைவர்கள் மக்களை பின்தொடர்கிறார்கள். தேர்தலுக்கு பின், மக்கள் தலைவர்களை பின்தொடர்கிறார்கள்.

    ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா, அவையில் பேசும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்களை திரும்பப் பெறும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இது குறித்து பூஜ்ஜியம் நேரத்தில் பேசும்போது ராகவ் சதா பேசியதாவது:-

    தற்போதைய நடைமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்களின் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்வதில் குறைபாடு உள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தலைவர்கள் மக்களை பின்தொடர்கிறார்கள். தேர்தலுக்கு பின், மக்கள் தலைவர்களை பின்தொடர்கிறார்கள்.

    உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது 5 வருடம் என்பது மிகவும் அதிகமான காலமாகும். தவறான தலைவர் லட்சக்கணக்கான மக்களையும் முழு பிராந்தியங்களையும் இருளிலும் பின்தங்கிய நிலையிலும் ஆழ்த்த முடியும். செய்த தவறுகளை திருத்துவதற்கான அதிகாரத்திற்கு வாக்காளர்கள் தகுதியானர்கள். திரும்பப் பெறும் உரிமை அரசியல்வாதிகளுக்கு எதிரான ஆயுதம் அல்ல. ஜனநாயகத்திற்கான காப்பீடு.

    தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, நீதிபதிகள், அரசாங்கத்தை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்ற வாய்ப்பை சரியாக செய்யாத எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிராக வாக்காளர்களுக்கு ஏன் வழங்கக் கூடாது.

    இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.

    Next Story
    ×