என் மலர்
இந்தியா

லடாக்கில் பயங்கரம்.. விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்.. 9 வீரர்கள் உயிரிழப்பு
- ராணுவ வாகனம் லடாக் அருகே சென்ற போது ஆற்றில் கவிழந்துள்ளது.
- விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் இருந்துள்ளனர்.
ராணுவ வாகனம் ஒன்று லடாக்கில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. லே பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ராணுவ வகனம் தரையில் சறுக்கியதால், நிலை தடுமாறி ஆற்றில் கவிழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விபத்தில் சிக்கிய ராணுவ வாகனத்தில் பத்து வீரர்கள் (எட்டு ஜவான்கள், ஒரு ஆணையர்) பயணம் செய்ததாகவும், இவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
Next Story






