என் மலர்
இந்தியா

சபரிமலைக்கு கடந்த ஆண்டை விட 4 லட்சம் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
- முறையான முன் ஏற்பாடுகள் மூலம் அனைவருக்கும் சீரான தரிசனம் கிடைத்து வருகிறது.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை 21 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.
சபரிமலை:
நடப்பு சீசனில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 4 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாக சபரிமலை பாதுகாப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சபரிமலையில் இந்த ஆண்டு பக்தர்களின் வருகை முந்தைய ஆண்டுகளை விட அதிகமாகவே உள்ளது. முறையான முன் ஏற்பாடுகள் மூலம் அனைவருக்கும் சீரான தரிசனம் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை 21 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதே கால அளவில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அதாவது, 4 லட்சம் பேர் கூடுதலாக வந்துள்ளனர்.
பக்தர்கள் முன்பதிவு செய்த நாளில் தரிசனத்திற்கு வர வேண்டும். மேலும் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிக்கான உடனடி தரிசன முன்பதிவுக்கான எண்ணிக்கை கேரள ஐகோர்ட்டின் அனுமதியின் பேரில் உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






