search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க. ஆட்சி - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு
    X

    திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க. ஆட்சி - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு

    • திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
    • நாகாலாந்தில் என்.டி.பி.பி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்.

    புதுடெல்லி:

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. 3 மாநிலங்களிலும் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

    திரிபுராவில் பா.ஜ.க. 36-45, இடது சாரிகள் 6-11 டி.எம்.பி. 9-16 இடங்களைப் பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

    திரிபுராவில் பா.ஜ.க. 36-45 இடதுசாரிகள் 6-11 இடங்களைப் பெறும் என என் டிவி கணிப்பை வெளியிட்டுள்ளது.

    நாகாலாந்தில் என்.டி.பி.பி - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்.

    மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்கவைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    மேகாலயாவில் பா.ஜ.க. 5 , காங்கிரஸ் 3, என்பிபி -20, பிற கட்சிகள் 30 இடங்களைப் பெறும் என டைம்ஸ் நவ் சேனல் கணித்துள்ளது.

    நாகாலாந்து என்.டி.டி.பி 38-48, என்.பி.எப் 3-8 காங்கிரஸ் 1-2, பிறகட்சிகள் 5-15 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×