என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் சோகம்: கார்கள் நேருக்கு நேர் மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் பலி
    X

    ஆந்திராவில் சோகம்: கார்கள் நேருக்கு நேர் மோதியதில் குழந்தை உள்பட 3 பேர் பலி

    • ஆந்திரா அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    விஜயவாடா:

    ஆந்திர மாநிலம் தேவாரப்பள்ளி நெடுஞ்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 19 மாத குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி நோக்கிச் சென்ற காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதும், சாலையின் எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×