search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செங்கல் சூளை தொழிலாளி சுட்டுக்கொலை
    X
    செங்கல் சூளை தொழிலாளி சுட்டுக்கொலை

    காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் தாக்குதல்- செங்கல் சூளை தொழிலாளி சுட்டுக்கொலை

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் அங்குள்ள வெளிமாநிலத்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அதிகரித்து உள்ளது. கடந்த ஒருமாதத்திற்கு மேலாக அங்கு பணியாற்றி வரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றும் பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.

    31-ந்தேதி ரஜனிபாலா என்ற பண்டிட் ஆசிரியை சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்தொடர்ச்சியாக நேற்று குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கிக்குள் புகுந்து மேலாளர் விஜயகுமார் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மத்திய காஷ்மீர் பகுதி பட்காம் மாவட்டம் மக்ரய்புரா என்ற இடத்தில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    திடீரென இந்த செங்கல்சூளைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் தில்குஷ்குமார் ( வயது17) என்ற தொழிலாளி குண்டுபாய்ந்து அதே இடத்தில் இறந்தார் இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.

    மற்றொரு தொழிலாளியான பஞ்சாப்பை சேர்ந்த ராஜன் என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் அங்குள்ள வெளிமாநிலத்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உயிருக்கு ஆபத்து இருப்பதால் தங்களை சொந்த மாவட்டங்க ளுக்கு மாற்ற கோரி அரசு ஊழியர்கள் நேற்று பேரணி சென்றனர். காஷ்மீர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அடுத்தடுத்து நடைபெற்று வரும் துப்பாக்கி சூடு சம்பவத்தால் காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
    Next Story
    ×