search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
    X
    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

    கேசிஆர்ரின் தவறான நிர்வாகத்தால் தெலுங்கானா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது- ராகுல் காந்தி

    விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு செழிப்பைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாகும்.
    ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் பிப்ரவரி 2014-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது தெலுங்கானா மாநிலம் இன்று உருவாக்கப்பட்டது.

    இந்நிலையில், தெலுங்கானா உருவான நாளையொட்டி அம்மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:-

    இந்தியாவின் இளைய மாநிலமான தெலுங்கானா, சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் ஆசைகளில் இருந்து பிறந்தது. காங்கிரஸ் கட்சியும் சோனியா காந்தியும் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, தெலுங்கானா கனவை நனவாக்க தன்னலமின்றி உழைத்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

    கடந்த 8 ஆண்டுகளில் கேசிஆர்ரின்  தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியால் தவறான நிர்வாகத்தை சந்தித்துள்ளது. தெலுங்கானா உருவான நாளில் புகழ்பெற்ற தெலுங்கானாவை உருவாக்குவதற்கான காங்கிரஸின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

    குறிப்பாக, விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு செழிப்பைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் ஒரு முன்மாதிரி மாநிலமாக உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்..  புதிய பாராளுமன்ற கட்டிடம் நவம்பர் 26-ந்தேதி திறப்பு?
    Next Story
    ×