search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதிதாக 3,324 பேருக்கு தொற்று- 4 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,876 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 36 ஆயிரத்து 253 ஆக உயர்ந்தது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    கடந்த 26ந் தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்கள் பாதிப்பு உயர்ந்து நேற்று 3,688 ஆக இருந்தது. இந்தநிலையில், இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 79 ஆயிரத்து 188 ஆக உயர்ந்தது.

    டெல்லியில் அதிகபட்சமாக 1,520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரியானாவில் 490, கேரளாவில் 337, உத்தர பிரதேசத்தில் 275, மகாராஷ்டிரத்தில் 155, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் 36 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர கர்நாடகாவில் 2 பேர், மகாராஷ்டிரா, டெல்லியில் தலா ஒருவர் என மேலும் 40 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,23,843 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,876 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 36 ஆயிரத்து 253 ஆக உயர்ந்தது.

    தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,092 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 408 அதிகம் ஆகும்.

    நாடு முழுவதும் இதுவரை 189 கோடியே 17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 25,95,267 டோஸ்கள் அடங்கும்.

    இதற்கிடையே நேற்று 4,71,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.79 கோடியாக உயர்ந்துள்ளது.


    Next Story
    ×