என் மலர்

  இந்தியா

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  4வது நாளாக பாதிப்பு உயர்வு- இந்தியாவில் புதிதாக 3,688 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்றின் பிடியில் இருந்து மேலும் 2,755 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 33 ஆயிரத்து 377 ஆக உயர்ந்தது.
  புதுடெல்லி:

  இந்தியாவில் புதிதாக 3,688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 26ந் தேதி பாதிப்பு 2,483 ஆக இருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 4 நாட்களாக பாதிப்பு உயர்ந்து வருகிறது.

  நேற்று அதிகபட்சமாக டெல்லியில் 1,607 பேருக்கு தொற்று உறுதியானது. அரியானாவில் 624, கேரளாவில் 412, உத்தரபிரதேசத்தில் 293, மகாராஷ்டிராவில் 148, கர்நாடகாவில் 133 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது.

  கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 45 நேற்றைய பட்டியலில் சேர்க்கப்பட்டது.

  இதுதவிர நேற்று மகாராஷ்டிராவில் 2 பேர், டெல்லியில் 2 பேர், உத்தரபிரதேசத்தில் ஒருவர் என மேலும் 50 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 5,23,803 ஆக உயர்ந்துள்ளது.

  தொற்றின் பிடியில் இருந்து மேலும் 2,755 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 33 ஆயிரத்து 377 ஆக உயர்ந்தது.

  தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,684 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 883 அதிகம் ஆகும்.

  நாடு முழுவதும் இதுவரை 188 கோடியே 89 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 22,58,059 டோஸ்கள் அடங்கும்.

  இதற்கிடையே நேற்று 4,96,640 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 83.74 கோடியாக உயர்ந்துள்ளது.

  Next Story
  ×