என் மலர்

  இந்தியா

  சத்ருகன் சின்ஹா
  X
  சத்ருகன் சின்ஹா

  2024 தேர்தலில் மம்தா மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவராக திகழ்வார் - சத்ருகன் சின்ஹா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளத்தின் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.
  கொல்கத்தா:

  மேற்குவங்காள மாநிலம் அசன்சோல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவும், பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வான அக்னிமித்ரா பவுலும் போட்டியிட்டார்.

  அசன்சோல் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே சத்ருகன் சின்ஹா முன்னிலையில் இருந்து வந்தார்.

  இறுதியில், சத்ருகன் சின்ஹா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

  இந்நிலையில், வெற்றி பெற்ற நிலையில் சத்ருகன் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  இந்த வெற்றி திரிணாமுல் காங்கிரஸ், மம்தா பானர்ஜி மற்றும் அசன்சோல் தொகுதி மக்களின் வெற்றியாகும்.

  நாடு முழுவதும் புகழ்பெற்ற தலைவராக திகழ்பவர் மம்தா பானர்ஜி. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவராகத் திகழ்வார் என குறிப்பிட்டுள்ளார்.

  Next Story
  ×