என் மலர்

  இந்தியா

  மோகன் பாகவத்
  X
  மோகன் பாகவத்

  15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் சாத்தியமாகும் - ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
  ஹரித்வார்: 

  உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

  கடவுள் கிருஷ்ணர் விருப்பப்படி இந்தியா எழுச்சி பெறும் என தத்துவ ஞானி அரவிந்தர் கூறியுள்ளார்.

  இந்தியா குறித்து அரவிந்தர் மற்றும் சுவாமி விவேகானந்தர் கூறியதில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

  வரும் 15 ஆண்டுகளில் அகண்ட பாரதம் சாத்தியமாகும். இதனை எனது சொந்த கணிப்பின்படி கூறுகிறேன்.

  நமது இலக்கை நோக்கி நகரும் வேகத்தை அடைய நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

  நல்லது செய்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கீதையில், கடவுள் கிருஷ்ணர் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

  உலகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களையும் இந்தியா வரவேற்றுள்ளது. இந்தியா தனது இலக்கை அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×