என் மலர்

  இந்தியா

  இந்தியா, பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரிகள் ஆலோசனை
  X
  இந்தியா, பிரிட்டன் வெளியுறவுத்துறை மந்திரிகள் ஆலோசனை

  இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது முக்கியமானது: பிரிட்டன் வெளியுறவு மந்திரி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்ரைன் நெருக்கடி, ஒருமித்த கருத்துக் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டுவதாக, பிரிட்டன் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
  புதுடெல்லி:

  இந்தியா வந்துள்ள  பிரிட்டன் வெளியுறவு மந்திரி லிஸ் ட்ரஸ், தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் விரிவான ஆலோசனை நடத்தினார். 

  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

  உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழலில் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்துவது முன்பை விட முக்கியமானது. உக்ரைன் நெருக்கடி உலக அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். ஒருமித்த எண்ணம் கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அது எடுத்துக் காட்டுகிறது.

  ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். நாடுகளுக்கு இடையேயான பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை,  மற்றும் சர்வதேச சட்டம் ஆகியகொள்கைகளை மதிப்பது மிகவும் முக்கியம். 

  இவ்வாறு பிரிட்டன் வெளியுறவு மந்திரி குறிப்பிட்டார்.
  Next Story
  ×