என் மலர்tooltip icon

    இந்தியா

    யோகி ஆதித்யநாத்
    X
    யோகி ஆதித்யநாத்

    உ.பி. தேர்தலில் 80 சதவீத இடங்கள் எங்களுக்கு கிடைக்கும்- யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

    இதுவரை நடைபெற்ற 6 கட்ட வாக்குப்பதிவில், தேசியவாதம், வளர்ச்சி, நல்லாட்சி, பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறினார்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் நாளை மறுநாள் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உத்தர பிரதேசத்தில் சாதி வெறி தகர்க்கப்பட்டுள்ளது. பரம்பரை அரசியலில் ஈடுபட்டவர்கள் தோல்வியடைந்துள்ளனர். இதுவரை நடைபெற்ற 6 கட்ட வாக்குப்பதிவில், தேசியவாதம், வளர்ச்சி, நல்லாட்சி, பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். திங்கள்கிழமை நடைபெற உள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவிலும் மக்களின் இந்த ஆதரவு நீடிக்கிறது. 

    வாக்குப்பதிவு முடிந்து, மார்ச் 10-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்போது, பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 80 சதவீத இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    எதிர்க்கட்சியினர் தொழில் மாஃபியாக்கள், குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பார்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே, மக்கள் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×