search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்"

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் களம் இறங்கியுள்ள நிலையில் பி.எஸ்.பி. கட்சி தனித்து போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
    உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கட்சி, யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்கிறது.

    இந்தமுறை பா.ஜனதாவுக்கு சட்டசபை தேர்தல் எளிதாக இருக்காது. கொரோனா 2-வது அலையின்போது யோகி ஆதித்யநாத் அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வந்த சம்பவம், லக்கிம்பூர் சம்பவம் ஆகியவை சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, சட்டசபை தேர்தலில் பி.எஸ்.பி. கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து மாயாவதி கூறுகையில் ‘‘சட்டசபை தேர்தலில் பி.எஸ்.பி. எந்தக்கட்சியுடனும் தேர்தல் ஒப்பந்தம் செய்யாது. எங்களுடைய பலத்தில் தனித்து போட்டியிடுவோம். அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து அவர்களுடன் கூட்டணி வைப்போம். அது நிலையான கூட்டணி. எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கும் எண்ணம் இல்லை’’ என்றார்.
    ×