என் மலர்tooltip icon

    இந்தியா

    பண மோசடி
    X
    பண மோசடி

    உத்தரகாண்டில் ரூ.3.80 கோடி மோசடி: போலி பாதுகாப்பு அதிகாரி கைது

    உத்தரகாண்டில் ராணுவ கேன்டீன் மற்றும் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்ய கான்ட்டிராக்ட் எடுத்து கொடுப்பதாக கூறி ரூ.3.80 கோடி மோசடி செய்த போலி பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் தன்னை ராணுவ பாதுகாப்பு அதிகாரி என கூறி பலரிடம் கைவரிசை காட்டினார். ராணுவ கேன்டீன் மற்றும் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்ய கான்ட்டிராக்ட் எடுத்து கொடுப்பதாக கூறி 30-க்கு மேற்பட்டவர்களிடம் முன்தொகையாக ரூ.3.80 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அதன்பிறகு அவர் ஏமாற்றியதை அறிந்த பணம் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பிக் கேட்டனர். ஆனால் அவர் திருப்பிக் கொடுக்கவில்லை.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொருளாதார தடுப்பு பிரிவு அதிகாரிகள் டேராடூனில் வைத்து வெங்கட கிருஷ்ண மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் போலி ராணுவ பாதுகாப்பு அதிகாரி என்பது தெரியவந்தது.
    Next Story
    ×