search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா மந்திரி ஞானேந்திரா, கொலை செய்யப்பட்ட ஹர்ஷா
    X
    கர்நாடகா மந்திரி ஞானேந்திரா, கொலை செய்யப்பட்ட ஹர்ஷா

    பஜ்ரங் தள் நிர்வாகி வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் - ஷிவமொகா நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    இந்தக் கொலைக்குப் பின்னணியில் எந்த அமைப்பும் இருப்பதாக தெரியவில்லை என கர்நாடகா உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
    ஷிவமொகா:

    ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டம் சற்று தணிந்துள்ள நிலையில், ஷிவமொகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில உள்துறை மந்திரி அரக ஞானேந்திரா, 26 வயதான ஹர்ஷாவை 4 முதல் 5 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இந்தக் கொலைக்குப் பின்னணியில் எந்த அமைப்பும் இருப்பதாக தமக்கு தெரியவில்லை என்றும், ஷிவமொகாவில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் கூறினார். 

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிவமொகா நகர பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    பஜ்ரங்தள் நிர்வாகி ஹர்ஷா,  கர்நாடகா எம்.பி.சுமலதா

    பஜ்ரங் தள நிர்வாகி கொலை ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் என்றும் மாண்டியா எம்.பி. சுமலதா அம்பரீஷ் தெரிவித்துள்ளார். 

    இந்த கொலை காரணமாக அந்த பகுதியில் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க அரசு முடிந்த அளவு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆனால் சிலர் மக்களை தூண்டி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×