என் மலர்

  இந்தியா

  எதிர்ப்பு
  X
  எதிர்ப்பு

  திருப்பதி தலைமையில் உதயமாகும் புதிய மாவட்டத்திற்கு பாலாஜி என்று பெயர் சூட்ட எதிர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதியை பாலாஜி மாவட்டம் என்பதை மாற்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்த திருப்பதி மாவட்டம் என அறிவிக்க வேண்டும்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன.

  இந்த 13 மாவட்டங்கள் பெரிய மாவட்டங்களாக உள்ளதால் மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின்னர் இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

  13 மாவட்டங்களில் இரண்டாக பிரித்து 26 மாவட்டங்களின் விவரங்களை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் அதிகாரிகள் வழங்கினர். இதையடுத்து ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் 2-ஆக பிரிக்கப்பட்டு தெலுங்கு வருடப்பிறப்பு அன்று 26 மாவட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளது.

  இந்த நிலையில் சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் சில பகுதிகளை பிரித்து திருப்பதியை தலைமையிடமாக கொண்டு பாலாஜி மாவட்டமாக அறிவிக்க உள்ளனர்.

  பாலாஜி என்பது வடமொழிச் சொல் இதனால் திருப்பதி என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து ஜனசேனா கட்சி மாவட்ட செயலாளர் கிரண்ராயல் என்பவர் கூறுகையில்:-

  திருப்பதியை பாலாஜி மாவட்டம் என்பதை மாற்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்த திருப்பதி மாவட்டம் என அறிவிக்க வேண்டும்.

  திருப்பதி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாட்ஸ்-அப், பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

  Next Story
  ×