என் மலர்

  இந்தியா

  கேரள ஆளுநர் ஏம் கான்
  X
  கேரள ஆளுநர் ஏம் கான்

  ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல.. திட்டமிட்ட சதி- கேரள ஆளுநர் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் குல்லா, ஹிஜாப், பர்தா, புர்கா போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

  இதற்கு மறுப்பு தெரவித்த இஸ்லாமிய மாணவிகள், தங்கள் உரிமையில் தலையிடுவதாக கூறி ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல.. திட்டமிட்ட சதி என்று கேரள ஆளுநர் ஏ.எம்.கான் கருத்து தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

  ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, மாறாக முஸ்லிம் இளம் பெண்களை அவர்களது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைக்க திட்டமிட்ட சதியாக நான் உணர்கிறேன்.

  அவர்கள் ஆண் பிள்ளைகளைவிட மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அவர்களை  ஊக்கமளிக்கவில்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்..  பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி கட்டமாக 3 ரபேல் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகிறது
  Next Story
  ×