என் மலர்

  இந்தியா

  இந்தூர் மத்திய சிறைச் சாலை
  X
  இந்தூர் மத்திய சிறைச் சாலை

  கைதிகளுக்காக எப்.எம். ரேடியோ- இந்தூர் மத்திய சிறையில் புதிய முயற்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிறையில் ரேடியோ தொடங்கிய முயற்சிக்கு முதல்வர் சிவராஜ் சிங் பாராட்டுகளையும், ஊக்கத்தையும் அளித்துள்ளார்.
  மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள இந்தூர் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகள் தாங்கள் செய்த குற்றத்தை உணர்வதற்காகவும், விடுதலை பெற்று வெளியே சென்றப் பிறகு ஒழுக்கத்துடன் இருப்பதற்காகவும் பயிற்சிகளும், சிறு தொழில்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

  அந்த வகையில், கைதிகள் வெளி உலக நடப்பைத் தெரிந்துக் கொள்ளும் விதமாக, இந்தூர் மத்திய சிறையில் சொந்தமாக 'ஜெயில் வாணி-எஃப்எம் 18.77' என்கிற ரேடியோ சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

  சிறையில் வானொலி நிலையம்

  இதுகுறித்து இந்தூர் சிறை கண்காணிப்பாளர் அல்கா சோன்கர் கூறியதாவது:-

  சிறைச்சாலைகள் சீர்திருத்த வசதிகளைக் கொண்டு இருக்க வேண்டும் என்று சிறை நிர்வாகம் விரும்புகிறது. ரேடியோ சேனல் மூலம் சிறையில் உள்ள கைதிகள் உலக நடப்பு பற்றித் தெரிந்துக் கொள்வார்கள். மேலும், எப்.எம் மூலம் கைதிகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் குறித்த தகவல்களும் வழங்கப்படும்.

  ரேடியோ சேனல் உரிய அனுமதியுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு முதல்வர் சிவராஜ் சிங் பாராட்டுகளையும், ஊக்கத்தையும் அளித்துள்ளார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையும் படியுங்கள்.. தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி
  Next Story
  ×