search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மல்லிகார்ஜுன கார்கே
    X
    மல்லிகார்ஜுன கார்கே

    காங்கிரஸை வெறுப்பதாக இருந்தால், அதை பாராளுமன்றத்திற்கு வெளியில் செய்யவும்: மல்லிகார்ஜுன கார்கே

    ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, காங்கிரஸை வெகுவாக விமர்சித்தார்.
    பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற இருஅவைகள் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற  இருஅவை உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

    மக்களவையில் ராகுல் காந்தி மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதில் அளித்தார்.

    அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையான வகையில் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் 1967-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. காங்கிரஸ் கட்சியை கலைக்க காந்தி முடிவு செய்தார். வம்சத்திற்கு அப்பால் சிந்திக்க முடியாது என பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    ஆனால் பெகாசஸ், பணவீக்கம் போன்ற எந்தவொரு பிரச்சினை குறித்து பேசவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் மோடி பேச்சுக்க கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில் ‘‘நீங்கள் காங்கிரஸ், காந்தி, நேரு அல்லது ராகுல் காந்தியை வெறுப்பதாக இருந்தால், பாராளுமன்றத்திற்கு வெளியே அது குறித்து சொல்லவும். அவர் (மோடி) நம்முடைய பிரச்சினைகளான பெகாசஸ், கொரோனா, பணவீக்கம் போன்றவற்றை விட்டுவிட்டார்.

    காங்கிரஸ் எதிர்த்து போரிட்டபோதும், சுதந்திரம் அடைந்த போதும் நாம் பிறக்காமல் கூட இருந்திருக்கலாம். பிரதமர் மோடி, தீர்மானத்தின் நன்றி தெரிவிப்பதை தவறான பயன்படுத்தியுள்ளார். அவருடைய முதன்மையான பணியை விட்டுவிட்டார்’’ என குற்றம்சாட்டியுள்ளார்.

    Next Story
    ×