search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கொரோனா தொற்று
    X
    கொரோனா தொற்று

    பிப்ரவரி 15-ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப்பெறுகிறது அசாம்

    பொது தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தி இருக்க வேண்டும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
    அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர், கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளை திரும்பப்பெற அம்மாநில அரசு முடிவு செய்தது.

    அதன்படி, வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படுவதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    அடுத்த இரண்டு மாதங்களில், பள்ளி பொதுத் தேர்வுகள், நகராட்சித் தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் திட்டமிட்டதுபோல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

    அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

    இதேபோல், இரவு நேர ஊரடங்கு உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் கூடும் மால்கள், சினிமா தியேட்டர்களும் முழுமையாக செயல்படும் என்றும்  அனைத்து இடங்களிலும் பொது மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், பொதுத் தேர்வு எழுதும் மா ணவர்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. கொரோனா பரவல் குறைந்தது-டெல்லி, குஜராத் மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
    Next Story
    ×