search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அகிலேஷ் யாதவ்
    X
    அகிலேஷ் யாதவ்

    யோகி ஆதித்யநாத்தை வீழ்த்த பாஜக எம்எல்ஏவுக்கு வலைவீசும் அகிலேஷ் யாதவ்

    பாஜக வேட்பாளர்கள் களத்தில் உள்ள தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சிக்கு வலுவான வேட்பாளர் இல்லை என பாஜக செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.
    லக்னோ:

    உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சிக்கு தாவி உள்ளனர். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரது சொந்த ஊரான கோரக்பூர் (நகர்ப்புறம்) தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. அவரை எதிர்த்து வலுவான  வேட்பாளரை களமிறக்க சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது. 

    யோகி ஆதித்யநாத்

    இந்நிலையில், கோரக்பூர் (நகர்ப்புறம்) தொகுதியின் தற்போதைய பாஜக எம்எல்ஏவான ராதா மோகன் அகர்வால், சமாஜ்வாடி கட்சிக்கு வந்தால் அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாக அகிலேஷ் யாதவ் கூறி  உள்ளார். 

    அகர்வால் 2002ம் ஆண்டில் இருந்து கோரக்பூர் (நகர்ப்புறம்) தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். 

    “முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவில் நடந்த சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது. ராதா மோகன் அகர்வாலை அந்த நிகழ்ச்சியில் பார்த்தேன். அவருக்கு இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டிருந்தார். பா.ஜ.க. ஆட்சியில் அவர் மிகவும் அவமதிக்கப்பட்டுள்ளார்” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

    சமாஜ்வாடி கட்சியின் இந்த ஆஃபர் குறித்து மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “பாஜகவின் ஒவ்வொரு உறுப்பினரும் கட்சியின் ஒழுக்கமான சிப்பாய் ஆவர். கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். கோரக்பூர் மட்டுமல்லாமல், மற்ற பாஜக வேட்பாளர்கள் களத்தில் உள்ள தொகுதிகளில்கூட, சமாஜ்வாடி கட்சிக்கு வலுவான வேட்பாளர் இல்லை. அதுதான், அகிலேஷ் யாதவின் விரக்திக்கும், அமைதியின்மைக்கும் காரணம்” என்றார்.

    Next Story
    ×